பொது செய்தி

தமிழ்நாடு

90 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவில்பாளையம் : அத்திப்பாளையம் ஊராட்சியில், 90 சதவீத வீடுகளுக்கு, ஜல்ஜீவன் திட்டத்தில், குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஜல்ஜீவன் திட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும், அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு தர அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திபாளையம் ஊராட்சியில் நடத்திய கணக்கெடுப்பில், 420 வீடுகளில்

கோவில்பாளையம் : அத்திப்பாளையம் ஊராட்சியில், 90 சதவீத வீடுகளுக்கு, ஜல்ஜீவன் திட்டத்தில், குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஜல்ஜீவன் திட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும், அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு தர அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திபாளையம் ஊராட்சியில் நடத்திய கணக்கெடுப்பில், 420 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த நிதியாண்டில், ஜல்ஜீவன் திட்டத்தில், 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில், விஜயலட்சுமி நகர், பிரீஸ் கார்டன், அத்திப்பாளையம் பெருமாள் கோவில் முன்புறம், ஒயிட் பீல்டு, அப்துல் கலாம் நகர் ஆகிய இடங்களில், புதிதாக ஐந்து போர்வெல்கள் போடப்பட்டன.

எம்.ஜி.ஆர்., நகரில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. பிரதான குழாய்கள் மற்றும் கிளை குழாய்கள் அமைக்கப்பட்டன. இதில், 90 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள, 10 சதவீதம் வீடுகளுக்கு இணைப்பு தரும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களுடைய, 10 சதவீத பங்கு தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது."ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நில மட்டத் தொட்டிக்கு, குடிநீர் வடிகால் வாரியம் போதுமான அளவு குடிநீர் வினியோகிப்பதில்லை. கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும்" என, அத்திப்பாளையம் ஊராட்சி தலைவர் சுபத்ரா புருஷோத்தமன் வலியுறுத்தியுள்ளார்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், அத்திப்பாளையத்தில், ஜல் ஜீவன் திட்டத்தில், வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X