சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் குழி; லாரிகளுக்கு தலைவலி மண்டி உரிமையாளர்கள் விரக்தி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : நெல்லிதுறை சாலையில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாதால், உருளைக் கிழங்கு ஏற்றி வரும் லாரிகள், அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட மண்டி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, மூன்றாவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள், மேட்டுப்பாளையம் நகரில், நெல்லித்துறை சாலையில்

மேட்டுப்பாளையம் : நெல்லிதுறை சாலையில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாதால், உருளைக் கிழங்கு ஏற்றி வரும் லாரிகள், அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட மண்டி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, மூன்றாவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள், மேட்டுப்பாளையம் நகரில், நெல்லித்துறை சாலையில் நடைபெறுகின்றன.நெல்லித்துறை சாலை பகுதியிலும், காந்தி மைதானம் சுற்றுப்பகுதியிலும், 75க்கும் மேற்பட்டஉருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றியும், நெல்லித்துறை சாலை வழியாக பயணிக்கின்றன.இந்த சாலையில், குழாய் பதிக்க தோண்டியதால், மூன்று இடங்களில், பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இவ்வழியாக லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக எடை லாரிகள்இதுகுறித்து உருளைக்கிழங்கு மண்டிகள் வர்த்தக சபை செயலாளர் ரங்கசாமி கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் லாரிகள், 10 டன், வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், 15 லிருந்து, 25 டன் எடையில், உருளைக் கிழங்குகளை ஏற்றி வருகின்றன.நெல்லித்துறை பிரதான சாலை வழியாக வரும் இந்த லாரிகள், குறுக்கு சாலைகளில் உள்ள மண்டிகளில், மூட்டைகளை இறக்குவதற்கு செல்லும். ஆனால், குழாய் பதிக்க தோண்டிய குழியில் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன.ஒவ்வொரு குழியும், 2, 3 அடி ஆழமாக உள்ளது. கிரேன் உதவியுடன், லாரிகளை துாக்க வேண்டியுள்ளது.

இதனால் லாரிகள் சேதம் அடைவதோடு,மண்டி உரிமையாளருக்கு விரயமும் ஏற்படுகிறது. தவிர, குறிப்பிட்ட நேரத்திற்கு மூட்டைகளை அனுப்ப முடிவதில்லை.அலட்சிய அதிகாரிகள் குழாய் பதித்த பிறகு, மண் கொட்டும்போது, களிமண்ணை அகற்றிவிட்டு, வேறு மண்ணைக் கொட்டும்படி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இந்தக் குழிகளால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. லாரிகள் சிக்கிக் கொள்வதால், மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கிறது.

எனவே, சாலையைச் சீரமைக்காத குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X