அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வியிலும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (10+ 11)
Share
Advertisement
சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலே அறிமுகம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தலைமைச் செயலர் இறையன்பு நிதித்துறை செயலர் கிருஷ்ணன்
தொழிற்கல்வி,7.5 சதவீதம், ஒதுக்கீடு, அரசு  முடிவு

சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலே அறிமுகம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தலைமைச் செயலர் இறையன்பு நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 2021 - 22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் 13ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. நடப்பு கூட்டத் தொடரிலேயே வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.கடந்த ஆண்டுகளில் பொறியியல் வேளாண்மை கால்நடை மீன்வளம் சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது.

இதற்கான காரணிகளை கண்டறிந்து உரிய தீர்வுகளை பரிந்துரைக்க ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணைய பரிந்துரைகளை ஏற்ற அரசு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போல அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏணைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துதல் மணல் விற்பனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஆக-202119:20:17 IST Report Abuse
Pugazh V @Sidhaarth - SENGOTTAI- மிகச்சிறந்த கேள்வி. சிறப்பு சிறப்பு.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஆக-202119:18:57 IST Report Abuse
Pugazh V /எல்லோரும் ஸ்தம்பித்து நிற்கின்றனர்/ இதற்கு காரணம் பாஜக அரசு தான். தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு களை உருவாக்கவில்லை. சிலைகள் கோவில் உயர் ரக கார் விமானம் என்று மக்கள் பணத்தை வீணடிக்கிறது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஆக-202119:16:33 IST Report Abuse
Pugazh V ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மு.க. ஸ்டாலின் அரசின் நடவடிக்கை கள் பெரிதும் பயன்தருகின்றன. வணக்கங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே. வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X