பொது செய்தி

தமிழ்நாடு

இருக்கு ஆனா இல்லை! மகளிருக்கு கட்டணமில்லா பஸ்கள்...'சாதாரணம்' குறைவு, 'சொகுசு' அதிகம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி : சோமனுார் சுற்றுவட்டார பகுதிகளில், பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் சாதாரண ரக பஸ்கள், போக்குவரத்துக் கழக டெப்போவில் இருக்கின்றன. ஆனால், ரோடுகளில் அதிகம் காண முடிவதில்லை. பதிலாக, சொகுசு பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால், பெண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில் அரசு போக்குவரத்துக் கழக

கருமத்தம்பட்டி : சோமனுார் சுற்றுவட்டார பகுதிகளில், பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் சாதாரண ரக பஸ்கள், போக்குவரத்துக் கழக டெப்போவில் இருக்கின்றன. ஆனால், ரோடுகளில் அதிகம் காண முடிவதில்லை. பதிலாக, சொகுசு பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

இதனால், பெண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இரு டிப்போக்களில் இருந்தும், காந்திபுரம், உக்கடம், அன்னுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், பெரும்பாலான பஸ்கள், சொகுசு பஸ்களாக உள்ளன. சாதாரண பஸ்களை விட, இவற்றில் கட்டணம் அதிகம். மேலும், சாதாரண பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. இதனால், அரசு அறிவித்த இலவச பஸ் சேவையை, சோமனுார் சுற்றுவட்டார கிராம பெண்கள் அனுபவிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட, அரசு தொடர்புத்துறை பிரிவு மாவட்டத் தலைவர், மயில்சாமி கூறியதாவது:சோமனுார் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பலரும் சாதாரண கட்டண பஸ்களில் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். 10 ஏ, 40 ஏ,90 பி, 30 ஜி, மற்றும் வாகராயம்பாளையத்துக்கு செல்லும் பல பஸ்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை.அவிநாசி, திருச்சி ரோட்டில் இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்கள் சொகுசு பஸ்களாகவே உள்ளன. இதில் கட்டணம் அதிகம் என்பதால், ஏழை மக்கள், பெண்கள், உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு செல்லும் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஏட்டளவில்அரசு அறிவித்த மகளிருக்கு இலவசம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஊரடங்கை காரணம் காட்டி சொகுசு பஸ்களை மட்டும் இயக்குவது, ஏழைகளை வஞ்சிக்கும் செயலாகும்.அதனால், ஏழை மக்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் சாதாரண கட்டண பஸ்களை, அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து புகார் மனுக்கள், போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X