சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்று, மழைக்கு பயிர்கள் சேதமா?

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை தாலுகா பகுதிகளில், அதிவேக காற்று மற்றும் மழைக்கு பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால், விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளனர். ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், கடந்த, மூன்று வாரங்களாக குறைந்தபட்சம், 10 மி.மீ., முதல் அதிகபட்சமாக, 22 மி.மீ., வரையில் மழை பெய்கிறது. பல நேரங்களில் கனமழை பெய்வதுடன், 35 கி.மீ.,க்கு அதிகமாக காற்று வீசுகிறது.இதனால், பல

ஆனைமலை : ஆனைமலை தாலுகா பகுதிகளில், அதிவேக காற்று மற்றும் மழைக்கு பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால், விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், கடந்த, மூன்று வாரங்களாக குறைந்தபட்சம், 10 மி.மீ., முதல் அதிகபட்சமாக, 22 மி.மீ., வரையில் மழை பெய்கிறது. பல நேரங்களில் கனமழை பெய்வதுடன், 35 கி.மீ.,க்கு அதிகமாக காற்று வீசுகிறது.இதனால், பல இடங்களில் வாழை மற்றும் கரும்பு பயிர்கள் சேதமடைகிறது. சேதம் ஏற்பட்டால் விவசாயிகள் தகவல் தெரிவிக்க, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனைமலை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் அறிக்கை:மழைக்காலம் துவங்கியுள்ளதால், அதிவேக காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இனி வரும் நாட்களில் மழை தீவிரமடையும். விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்பட அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு செய்தால் மட்டுமே, இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும். தற்போது, அதிவேக காற்று வீசுவதால், வாழை, தென்னை, கரும்பு உள்பட பயிர்கள் பாதிக்கப்பட்டால், விவசாயிகள் உடனடியாக வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து சேதம் குறித்து, அறிக்கை சமர்பித்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X