எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க.,வுக்கு தலைமை ஏற்பு? சசிகலாவின் 'சைலன்ஸ்' பின்னணி

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
'சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது' என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அதிரடியாக தெரிவித்த பின், சசிகலா ஒரு வாரமாக, 'வீடியோ, ஆடியோ' வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினர். அப்போது,
சசிகலா,சைலன்ஸ் , அ.ம.மு.க., தலைமை ஏற்பு?

'சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது' என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அதிரடியாக தெரிவித்த பின், சசிகலா ஒரு வாரமாக, 'வீடியோ, ஆடியோ' வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்.

சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினர். அப்போது, ஓ.பி.எஸ்.,சிடம், 'சசிகலா மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்படுவாரா?' என்ற கேள்விக்கு, 'சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது' என, அதிரடியாக தெரிவித்தார்.


அதிர்ச்சி



சசிகலாவுக்கு திரைமறைவில் ஆதரவு அளித்து வந்ததாக கூறப்பட்ட ஓ.பி.எஸ்., டில்லி பயணத்திற்கு பின், அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, சசி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், அவர் ஒரு வாரமாக, ஆடியோ, வீடியோவில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., திரும்பியதற்கு கைமாறாக, மத்திய அமைச்சரவையில், அவரது மகன் ரவீந்திரநாத்திற்கு பதவி வழங்க, பா.ஜ., மேலிடத்திடம் இ.பி.எஸ்., பரிந்துரை செய்துள்ளார் என, கூறப்படுகிறது.இதையடுத்து, 'அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவி தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு பாதகமாக தீர்ப்பு வருமானால், அவர் அ.தி.மு.க.,வை கைப்பற்றும் முடிவை கைவிட வேண்டும்.அதற்கு பதிலாக, அ.ம.மு.க., தலைவராக பொறுப்பேற்க வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


சுற்றுப்பயணம்



அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:'சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க முடியாது' என, ஓ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி காட்டியதால் தான், இந்த முடிவை அவர் அறிவித்து உள்ளார். எனவே, இனிமேல் அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கும் கோஷத்தையும், திட்டத்தையும், சசிகலா கைவிட வேண்டும். அதற்கு பதிலாக, அ.ம.மு.க.,வுக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும்.கொரோனா ஊரடங்கு முடிந்ததும், சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அவரை வரவேற்க அ.தி.மு.க., தொண்டர்கள் வரப் போவதில்லை. அ.ம.மு.க.,வினர் தான் வருவர். எனவே, சுற்றுப்பயணத்திற்கு முன்,
அவர் அ.ம.மு.க., தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202114:26:08 IST Report Abuse
vpurushothaman வான்கோழி மயிலாக முடியாது. ஜெவுடன் இருந்து கொள்ளையடித்ததை வைத்துப் பிழைத்துக் கொள்ளுவதை விடுத்துப் பேராசைப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைப்பதே சசிக்கு நல்லது.
Rate this:
Cancel
05-ஆக-202114:11:13 IST Report Abuse
உஷா வாசுதேவன் எப்போதும் சசிகலாவால் முன்னணியில் இயங்க முடியாது தெரியாது. ஜெவைப்போல் திறமையான பப்ளிக், மக்கள் பர்சனாலிடி உள்ளவர் இருந்தால் ஆதி முதல் அப்பல்லோ வரை பின்னணியில் அட்டகாசம் செய்வார்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202109:10:05 IST Report Abuse
Kasimani Baskaran ஏ1 ஏ2 ஆகியோரின் சொத்துக்களை முழுவதும் அரசு பறிமுதல் செய்திருக்கவேண்டும். அப்படிச்செய்யாமல் சிறிதளவு அபதாரம், சிறை என்று சென்றுவந்தபின் புனிதர் போல மறுபடியும் அரசியல் என்று இறங்குவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் கூத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X