பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை சான்றுக்கு 7ம் தேதி சிறப்பு முகாம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : கோவை மாவட்டம் முழுவதிலும், விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்படும் சான்றிதழ்கள் வழங்க, வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டம் முழுவதிலும், சொட்டு நீர் பாசன திட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் பயனடைய, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இலக்கு பெற்றுள்ளனர். விவசாயிகள் விரைவாக வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள்

ஆனைமலை : கோவை மாவட்டம் முழுவதிலும், விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்படும் சான்றிதழ்கள் வழங்க, வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கோவை மாவட்டம் முழுவதிலும், சொட்டு நீர் பாசன திட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் பயனடைய, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இலக்கு பெற்றுள்ளனர். விவசாயிகள் விரைவாக வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் பெற்று சொட்டுநீர் பாசன திட்டத்தில் பயனடைய, வருவாய்த்துறையினர் ஜூலை, 24ம் தேதி முகாம் நடத்தினர். அடுத்தகட்டமாக வரும், 7ம் தேதி கோவை மாவட்டம் முழுவதிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு தாலுகாவிலும், அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடக்கும் இம்முகாமில் பங்கேற்று, விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு மற்றும் குறு விவசாயிகள் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் .விவசாயிகள் தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற, பொது சேவை மையம் மற்றும் இ-சேவை மையங்களில் இன்று விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X