பொது செய்தி

தமிழ்நாடு

பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு நான்கு நாட்கள் மட்டுமே ஆறுதல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், நான்கு நாட்களாக குறைந்திருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்று முதல் (5ம் தேதி) மீண்டும் உயர்த்தப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த போது, ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டத்தை குறைக்க, பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதன் அடிப்படையில், கடந்த மே, 1ம்

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், நான்கு நாட்களாக குறைந்திருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்று முதல் (5ம் தேதி) மீண்டும் உயர்த்தப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த போது, ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டத்தை குறைக்க, பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதன் அடிப்படையில், கடந்த மே, 1ம் தேதி முதல், கடந்த ஜூலை, 31ம் தேதி வரை, ஒரு நபருக்கு, 50 ரூபாய் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணமாக உயர்த்தி வசூலிக்கப்பட்டது.மூன்று மாதங்கள் நீடித்த இந்த கட்டண உயர்வு குறைந்து, கடந்த, 1ம் தேதி முதல், 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இது, ரயில் பயணிகளுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.ஆனால், அந்த ஆறுதல் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்தது. இன்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் மீண்டும், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரும் அக்., 31 வரை அமலில் இருக்கும், என, பாலக்காடு கோட்ட வர்த்தப் பிரிவு நிர்வாகம் அறிவித்துள்ளது.அதிக எண்ணிக்கையில் ரயில்கள் வந்து செல்லும் ஸ்டேஷன்களில், மக்கள் கூட்டம் திரண்டு, தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், அதை தவிர்க்க பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது நியாயம்.

ஆனால், இரண்டே ரயில்கள் ஓடும் பொள்ளாச்சி ஸ்டேஷனில், மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. இங்கு வரும் சொற்பமான எண்ணிக்கையிலான மக்களிடம், கொரோனாவை காரணம் காட்டி, 50 ரூபாய் கட்டணம் வசூலிப்பது அர்த்தமற்றது என ரயில்வே ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X