பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை பின்பற்ற நகராட்சி 'அட்வைஸ்'

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : ''பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள கடைகளில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,'' என, நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி தெரிவித்தார். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கமிஷனர் தாணுமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட நிர்வாக உத்தரவின் படி, நகரப்பகுதியில் உள்ள வணிக கடைகள்

பொள்ளாச்சி : ''பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள கடைகளில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,'' என, நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கமிஷனர் தாணுமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட நிர்வாக உத்தரவின் படி, நகரப்பகுதியில் உள்ள வணிக கடைகள் காலை, 6:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இறைச்சி கடைகள் காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி வரையும்; பேக்கரி, டீ கடைகள் மாலை, 5:00 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டல்களில் இரவு, 9:00 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும். உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து, குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். கடைகளில், சானிடைசர் வைக்க வேண்டும். பணியாற்றுபவர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 50 சதவீத பணியாளர்களுடன் கடைகள் செயல்பட வேண்டும்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொற்று பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பரவல் அதிகரிக்காமல் இருக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X