பொது செய்தி

இந்தியா

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு வாரம் நீட்டிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:மருத்துவ இளநிலை படிப்புக்கான, 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு, செப்., 12ல் நடக்க உள்ளது.இதுவரை தமிழ் உட்பட, 11 மாநில மொழிகளில் தேர்வு

புதுடில்லி:மருத்துவ இளநிலை படிப்புக்கான, 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு, செப்., 12ல் நடக்க உள்ளது.இதுவரை தமிழ் உட்பட, 11 மாநில மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு, பஞ்சாபி மற்றும் மலையாள மொழிகளிலும் தேர்வு எழுதலாம்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, 198 நகரங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேர்வை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 10ம் தேதி மாலை 5:00 மணி வரை, neet.nta.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கலாம்.நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தை, 10ம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம்.வரும் 11ம் தேதி முதல், 14ம் தேதி மதியம் 2:00 மணி வரை, ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X