பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையங்களில் 600 பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, நேற்று 2வது தவணை தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில், தலா, 100 பேர் வீதம் நேற்று, 300 பேருக்கு இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்களுக்கு, காலை, 8:00 மணிக்கு 'டோக்கன்' வினியோகிக்கப்பட்டு,

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, நேற்று 2வது தவணை தடுப்பூசி முகாம் நடந்தது.

முகாமில், தலா, 100 பேர் வீதம் நேற்று, 300 பேருக்கு இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்களுக்கு, காலை, 8:00 மணிக்கு 'டோக்கன்' வினியோகிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல, நெகமம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ராமபட்டணம், புரவிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தலா, 100 எண்ணிக்கையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.இருப்பினும், 2வது தவணை தடுப்பூசி கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X