பொது செய்தி

தமிழ்நாடு

காயமடைந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில், கரடி தாக்கி படுகாயமடைந்த, வசந்த் பிரபாகரன், 22, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாலிபரின் குடும்பத்துக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், போலீசார் ஆறுதல் கூறியதோடு, நிவாரணப்பொருட்களையும் வழங்கினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ''வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த

வால்பாறை : வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில், கரடி தாக்கி படுகாயமடைந்த, வசந்த் பிரபாகரன், 22, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாலிபரின் குடும்பத்துக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், போலீசார் ஆறுதல் கூறியதோடு, நிவாரணப்பொருட்களையும் வழங்கினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ''வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் மக்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பில் பிரச்னை ஏற்பட்டால், 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பெண்கள் உதவி மையத்திலும், 1098 என்ற எண்ணில் குழந்தைகள் உதவி அழைப்பு மையத்திலும் புகார் செய்யலாம். புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X