சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ; இருவர் கைது; 2 டன் பறிமுதல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற, இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி ஜோதிநகர் அமைதி நகரில், காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இருந்த காரை பரிசோதனை செய்த போது, 20 மூட்டைகளில் தலா, 50 கிலோ வீதம் ரேஷன்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற, இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி ஜோதிநகர் அமைதி நகரில், காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இருந்த காரை பரிசோதனை செய்த போது, 20 மூட்டைகளில் தலா, 50 கிலோ வீதம் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு கார் மட்டும் நின்றது.

அதில், இருந்த, ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.ஆனைமலைஅம்பராம்பாளையம் அருகே, குஞ்சிபாளையம் ரோட்டில் காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., கார்த்திக்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று வாகன சோதனை செய்தனர்.அதில், 18 மூட்டைகளில் இருந்த, ஒரு டன் ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டி வந்த கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த அஜ்மல், 18, என்பவரை, போலீசார் கைது செய்து, உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X