சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நொய்யல் ஆற்றங்கரையில் குப்பையில் தீ விபத்து

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூலுார் : சூலுார் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பையில் பிடித்த தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.சூலுார் அடுத்த சிந்தாமணிப்புதுார் அருகே, நீலம்பூர் பை - பாஸ் ரோட்டின் குறுக்காக நொய்யல் ஆறு பாய்கிறது. ஆற்றங்கரையை ஒட்டி, அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது. இரவில் அந்த வழியில் வாகனங்களில் சென்று, கட்டட கழிவுகள், ஆயில் கழிவுகள்,

சூலுார் : சூலுார் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பையில் பிடித்த தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.சூலுார் அடுத்த சிந்தாமணிப்புதுார் அருகே, நீலம்பூர் பை - பாஸ் ரோட்டின் குறுக்காக நொய்யல் ஆறு பாய்கிறது.

ஆற்றங்கரையை ஒட்டி, அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு செல்லும் வழித்தடம் உள்ளது. இரவில் அந்த வழியில் வாகனங்களில் சென்று, கட்டட கழிவுகள், ஆயில் கழிவுகள், பழைய சாக்குகள் உள்ளிட்ட கழிவுகளை, ஆற்றங்கரைப் பகுதியில், பலரும் கொட்டி சென்று விடுகின்றனர்.இதனால், அப்பகுதியில் குப்பை அதிகளவில் குவிந்து கிடக்கிறது. அங்கிருந்த குப்பையில், நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது.அவ்வழியில் செல்வோர், சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கோபால் தலைமையில் வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
05-ஆக-202110:34:10 IST Report Abuse
ellar இவ்வளவு பணம் அரசாலும் தனியார் அமைப்புகளாலும் செலவு செய்யப்பட்ட பின்னர் கரையின் அழகை பாருங்கள். அரசு அதிகாரிகள் (பொதுப்பணித்துறை, உள்ளூர் வருவாய் ஆய்வாளர், பஞ்சாயத்து செயலர் ஆகிய அனைவரும்) எந்த செயலையும் சரிவர செய்யாததின் விளைவே இம்மாதிரி நிகழ்வு ளுக்கு காரணம். வியாபாரிகள் கொண்டு வந்து கொட்டும் குப்பைகள் அடுத்த காரணி. இந்த இரண்டு வர்க்கங்களும் மனசாட்சிப்படியும் தங்கள் குடும்பம் எதிர்காலத்தில் பாவம் இன்றி வாழவும் தக்க முறையில் நடந்து கொண்டால் மக்களும் திருந்தி நதிகள் காப்பாற்றப்படும். இல்லாவிடில் போடும் வரிப்பணம் விழலுக்கு இறைத்த நீர்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X