பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி

Added : ஆக 04, 2021
Share
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு அருகே, பைக்கில் சென்றவர், தடுமாறி கீழே விழுந்து இறந்தார். பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தசாமி,51. நேற்று முன்தினம் கோவை சென்றவர், இரவு 8:00 மணி அளவில் வீட்டுக்கு, பைக்கில் சென்றார்.கோவை - பொள்ளாச்சி ரோடு, அரசம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க, வாகனத்தை திருப்பியபோது, தடுமாறி

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு அருகே, பைக்கில் சென்றவர், தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தசாமி,51. நேற்று முன்தினம் கோவை சென்றவர், இரவு 8:00 மணி அளவில் வீட்டுக்கு, பைக்கில் சென்றார்.கோவை - பொள்ளாச்சி ரோடு, அரசம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க, வாகனத்தை திருப்பியபோது, தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நேற்று காலை, சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X