சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டு வரி ரசீது, கையொப்பம் எல்லாமே போலி!

Added : ஆக 04, 2021
Share
Advertisement
அன்னுார், : குன்னத்துார் ஊராட்சி நிர்வாகம் மீது, துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.குன்னத்துார் ஊராட்சி தலைவராக கீதா, துணைத்தலைவராக மூர்த்தி உள்ளனர். நேற்று ஊராட்சி துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் மூன்று வார்டு உறுப்பினர்கள், அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி அசோகனிடம் அளித்த மனு:ஊராட்சியில், மன்ற

அன்னுார், : குன்னத்துார் ஊராட்சி நிர்வாகம் மீது, துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.குன்னத்துார் ஊராட்சி தலைவராக கீதா, துணைத்தலைவராக மூர்த்தி உள்ளனர்.

நேற்று ஊராட்சி துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் மூன்று வார்டு உறுப்பினர்கள், அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி அசோகனிடம் அளித்த மனு:ஊராட்சியில், மன்ற அங்கீகாரம் இல்லாமலே மனை அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 'லேஅவுட்' களுக்கு முறையற்ற வகையில் அங்கீகாரம் தரப்படுகிறது. ஊராட்சித் தலைவருக்கு பதில் அவருடைய கணவர், தங்கராஜ் ஊராட்சி நிர்வாகத்தை நடத்துகிறார்.கட்டட வரைபடத்தில் ஊராட்சி தலைவரின் கையெழுத்தை தலைவரின் கணவரே போடுகிறார். போலியாக வீட்டு வரி ரசீது போட்டு பணம் வசூலிக்கின்றனர்.

இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், "ஆதாரங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தார்.விளக்கம்இதுகுறித்து ஊராட்சி தலைவரின் கணவர் தங்கராஜிடம் கேட்டபோது, "நான் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று 10 நாட்கள் ஆகிவிட்டது. இது பொய்யான குற்றச்சாட்டு. ஊராட்சி துணைத் தலைவர் மீது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே, அதில் இருந்து தப்பிக்கவே, இதுபோல் உண்மையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X