பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2: முதல் அலகுத்தேர்வு துவக்கம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் அலகுத்தேர்வு, ஒவ்வொரு பிரிவிலும் இரு பாடங்களை உள்ளடக்கி நடத்தப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதேநேரம், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அலகுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை

உடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் அலகுத்தேர்வு, ஒவ்வொரு பிரிவிலும் இரு பாடங்களை உள்ளடக்கி நடத்தப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அதேநேரம், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அலகுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணிதம், தாவரவியல், பொருளாதாரம்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணிதம் மற்றும் ஆங்கிலம் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரு பாடங்களை உள்ளடக்கி வினாத்தாள்கள் அமைக்கப்பட்டிருந்தன.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்கள், வீட்டில் இருந்தே படிப்பதால், அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள, தேர்வு நடத்தி மதிப்பிடப்படுகிறது. எனவே, பள்ளிகள் தோறும், ஒவ்வொரு மாதமும், 50 மதிப்பெண்களுக்கு, 'வாட்ஸ்-ஆப்' வாயிலாக தேர்வு நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வியாண்டு துவங்கியும் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நேரடி சந்திப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பல பள்ளிகளில், தேர்வுக்கு, சில மணி நேரம் முன்பு, 'ஜூம்' மீட்டிங் வாயிலாக மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஆசிரியர்கள், தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X