பொது செய்தி

தமிழ்நாடு

'ஊராட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை' ஊராட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சூலுார், : "ஊராட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, எங்களை ஊராட்சித் தலைவர்கள் அழைப்பதில்லை,"என, ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். சூலுார் ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு தலைமை வகித்தார். ஒன்றியத்தில் நடக்கும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. வரவு, செலவு விபரங்கள் கவுன்சில் முன் தாக்கல்

சூலுார், : "ஊராட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, எங்களை ஊராட்சித் தலைவர்கள் அழைப்பதில்லை,"என, ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

சூலுார் ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு தலைமை வகித்தார். ஒன்றியத்தில் நடக்கும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. வரவு, செலவு விபரங்கள் கவுன்சில் முன் தாக்கல் செய்யப்பட்டது.'ஜல்ஜீவன்' திட்ட பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஊராட்சிகளில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் தலைவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை, என, சில கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

அதற்கு, 'முறையாக அழைப்பு விடுக்க தலைவர்களுக்கு அறிவுறுத்துவதாக' அதிகாரிகள் கூறினர்.ஊராட்சிகளுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும். சிறப்பு முகாம்கள் நடத்தி, மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, ரவிச்சந்திரன் மற்றும் வேளாண், குடிநீர் வழங்கல், போக்குவரத்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X