பொது செய்தி

தமிழ்நாடு

உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலையம், தேஜஸ் ரோட்டரி சங்கம், அவிநாசி ரோட்டரி சங்கம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. டாக்டர் கவுதம் தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தாய்ப்பால் ஆலோசகர் ராஜேஸ்வரி பேசியதாவது: பிறந்த முதல், 6 மாதத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுடன்,

உடுமலை : உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலையம், தேஜஸ் ரோட்டரி சங்கம், அவிநாசி ரோட்டரி சங்கம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.

டாக்டர் கவுதம் தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தாய்ப்பால் ஆலோசகர் ராஜேஸ்வரி பேசியதாவது: பிறந்த முதல், 6 மாதத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுடன், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானதாகும்.பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில், உடுமலையில் ரோட்டரி சங்கம் சார்பில், தாய்ப்பால் வங்கி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தட்டுப்பாடு இல்லாமல், 250 மில்லி வரை, தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்யலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X