பொது செய்தி

தமிழ்நாடு

டோல் பிளாசாவில் கொரோனா விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி, டோல் பிளாசா சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு கலெக்டர் மோகன் தலைமையில் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு உறுதி மொழியேற்றனர்.பின்னர்

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி, டோல் பிளாசா சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு கலெக்டர் மோகன் தலைமையில் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு உறுதி மொழியேற்றனர்.பின்னர் வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார்.தொடர்ந்து, பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து தடுப்பூசி சான்றிதழை வழங்கினார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சப் கலெக்டர் (பயிற்சி) ரூபினா, சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார், சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, டி.இ.ஓ., கிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், சிவக்குமார், தாசில்தார் தமிழ்ச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, டோல் பிளாசா பொதுமேலாளர் முத்து அண்ணாமலை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மாணிக்கம் பிரசாரம் செய்தனர்.பிரசாரத்தில் பெருமாள், ேஹமலதா குழுவினரால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. டோல் பிளாசா துணை மேலாளர்கள் அமிர்தலிங்கம், சொர்ண மணி, அசோக்குமார், ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, இணை கன்வீனர் தமிழழகன், சாரண இயக்க பயிற்சி ஆணையம் கற்பகம், துணை அமைப்பு ஆணையர் சோபியா, செயலாளர் மணி, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X