வணிகவரித்துறை அலுவலகத்தில் கோவிட் விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வணிகவரித்துறை அலுவலகத்தில் கோவிட் விழிப்புணர்வு கூட்டம்

Added : ஆக 04, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் வணிகவரித்துறை அலுவலகத்தில், கொரோனா மூன்றாம் ஆலை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வணிகவரி துணை ஆணையர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். இதில், வணிக வரித்துறை அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்களின் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய

விழுப்புரம்-விழுப்புரம் வணிகவரித்துறை அலுவலகத்தில், கொரோனா மூன்றாம் ஆலை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வணிகவரி துணை ஆணையர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். இதில், வணிக வரித்துறை அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்களின் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வணிகவரி அலுவலர் அறிவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X