மண்வள பாதுகாப்பு பயிற்சி முகாம்| Dinamalar

மண்வள பாதுகாப்பு பயிற்சி முகாம்

Added : ஆக 04, 2021
கண்டமங்கலம்-கண்டமங்கலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நவமால்மருதுார் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமை தாங்கினார். மண் பரிசோதனை செய்வதன் நன்மை மற்றும் அதற்கேற்ப பரிசோதித்து உரமிடுதல் மற்றும் தண்ணீர் பரிசோதித்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்

கண்டமங்கலம்-கண்டமங்கலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நவமால்மருதுார் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமை தாங்கினார். மண் பரிசோதனை செய்வதன் நன்மை மற்றும் அதற்கேற்ப பரிசோதித்து உரமிடுதல் மற்றும் தண்ணீர் பரிசோதித்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.நடமாடும் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். துணை வேளாண் அலுவலர் சுப்புராஜ், உதவி வேளாண் அலுவலர் சதஸ்ரீ, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேன்மொழி, உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யனார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X