'போஸ்டர்' எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பல முறை எச்சரித்தும், 'பெகாசஸ்' விசாரணை கோரி 'போஸ்டர்'களுடன் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ஆறு பேரை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு 'சஸ்பெண்ட்' செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று காலை ராஜ்யசபா கூடியதும், மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்., சார்பில் புதிய எம்.பி.,யாக தேர்வான ஜவஹர் சிர்கர் பதவியேற்றார். பின், வழக்கம்போல அமளி
 'போஸ்டர்' எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்'

பல முறை எச்சரித்தும், 'பெகாசஸ்' விசாரணை கோரி 'போஸ்டர்'களுடன் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ஆறு பேரை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு 'சஸ்பெண்ட்' செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை ராஜ்யசபா கூடியதும், மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்., சார்பில் புதிய எம்.பி.,யாக தேர்வான ஜவஹர் சிர்கர் பதவியேற்றார். பின், வழக்கம்போல அமளி ஆரம்பமானது. பெகாசஸ் பிரச்னை தொடர்பாக விசாரணை கோரி போஸ்டர்களை உயர்த்தி பிடித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, ''விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கிறேன். விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தம் குறித்தும் விவாதிக்க அரசு சம்மதித்துள்ளது,'' என்றார்.ஆனால், 'இந்த பிரச்னைகள் குறித்த விவாதத்திற்கு முன், பெகாசஸ் மென்பொருளை அரசு வாங்கியதா, இல்லையா என்பதற்கு பதில் வேண்டும்' என, எம்.பி.,க்கள் கோஷமிட்டனர்.

அவர்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு வெங்கையா நாயுடு பலமுறை எச்சரித்தார். பலனில்லாததால், போஸ்டர்களைப் பிடித்து அமளியில் ஈடுபட்ட டோலாசென், முகமது நதிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிவஸ், ஷாந்தா செட்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நுார் ஆகிய ஆறு திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள், நாள் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதியத்துக்கு மேல், சபை கூடியதும் சில மசோதாக்கள் மீதான விவாதம் துவங்கியது.

ஆனால், மசோதா மீது பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட எம்.பி.,க்கள், பெகாசஸ், விவசாயிகள் போராட்டம் என, பேசத் துவங்கியதால், அவர்களின் 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டு, அமளி மேலும் அதிகமானது.

அப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளைப் பற்றி பேசவும், விவாதிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தயாராக உள்ளனர்.எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மசோதாக்கள் மீதான விவாதத்தை விடுத்து, மற்ற பிரச்னைகளை பேசுகின்றனர். இது, ராஜ்யசபாவுக்கு மிகவும் மோசமான நாள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., - எம்.பி., சிவா கூறியதாவது:மசோதாக்கள் மீதான விவாதங்களில், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்களை எம்.பி.,க்கள் பேசுவது வழக்கமான நடைமுறை தான். அதில் அமைச்சர் தலையிடுவது, சபை விதிகளுக்கு முரணானது.இவ்வாறு அவர் கூறினார். லோக்சபாவிலும் அமளிக்கு பஞ்சமில்லை.

இதற்கு மத்தியில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்த தென்னை மேம்பாட்டு வாரிய திருத்த மசோதா, விவாதம் ஏதுமின்றி, குரல் வாக்கெடுப்பின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல், பின்தங்கிய கிராமப்பகுதி மக்களுக்கும் விமான சேவைகளை விரிவுபடுத்துதல், சிறிய விமான நிலையங்களை ஊக்குவித்தல் தொடர்பான, விமான நிலையங்கள் ஒழுங்குமுறை ஆணைய சட்டத் திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இத்தனை அமளிக்கு மத்தியில், இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X