சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினருக்கிடையே மோதல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மின்வாரிய ஊழியருக்கு கத்தி குத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை பிரகாஷ் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் மதியழகன், 55; இவரது அக்கா மகன் கார்த்திக், 27; இவரிடம் மதியழகன் மகன் அஜித், 21; பைக் வாங்கிச் சென்றார். பைக் பழுதானதால் அதனை சரி செய்து

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மின்வாரிய ஊழியருக்கு கத்தி குத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை பிரகாஷ் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் மதியழகன், 55; இவரது அக்கா மகன் கார்த்திக், 27; இவரிடம் மதியழகன் மகன் அஜித், 21; பைக் வாங்கிச் சென்றார். பைக் பழுதானதால் அதனை சரி செய்து கொடுத்துள்ளார்.ஆனால், பைக்கை சரி செய்யவில்லை என கார்த்திக் கூறியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் தாக்கிக் கொண்டனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கலைமணி, 34; என்பவர் தட்டிக் கேட்டபோது, அவரை கத்தியால் குத்தினர்.இந்த தகராறில் காயமடைந்த கலைமணி, கலைவாணன், கார்த்திக், சூர்யா என இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார், 10 பேர் மீது வழக்குப் பதிந்து கார்த்திக், அஜித் உட்பட 8 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X