கர்நாடகாவில் 29 அமைச்சர்கள் பதவியேற்பு பதவி கிடைக்காத பலர் கடும் அதிருப்தி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பெங்களூரு:எடியூரப்பா ஆட்சியில் பதவி வகித்தவர்களில் 23 பேர், புதியவர்கள் ஆறு பேர் என, 29 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, ஜூலை 26ல் பதவியிலிருந்து விலகினார். புதிய முதல்வராக ஷிக்காவ் தொகுதி எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை, 61, ஜூலை 28ல் பதவியேற்றார்.அமைச்சர்கள் பட்டியலுடன்

பெங்களூரு:எடியூரப்பா ஆட்சியில் பதவி வகித்தவர்களில் 23 பேர், புதியவர்கள் ஆறு பேர் என, 29 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, ஜூலை 26ல் பதவியிலிருந்து விலகினார். புதிய முதல்வராக ஷிக்காவ் தொகுதி எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை, 61, ஜூலை 28ல் பதவியேற்றார்.அமைச்சர்கள் பட்டியலுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை மூன்று நாட்கள் டில்லியில் முகாமிட்டார். நேற்று முன்தினம் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

நேற்று காலை 10:30 மணிக்கு அந்த பட்டியல் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நேற்று நடந்தது. மொத்தம் 29 பேர் நேற்று மதியம் 2:15 மணிக்கு அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள். அவரை வெளிப்படையாக எதிர்த்து வந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் பெல்லத், யோகேஸ்வர் ஆகியோர், மீண்டும் அமைச்சர் பதவியை பெற கடின முயற்சி மேற்கொண்டனர். எனினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதேபோல, அமைச்சர் பதவியை எதிர்பார்த்த 30க்கும் அதிகமானோர் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

கடந்த முறை, கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி ஆகியோர் துணை முதல்வராக பதவி வகித்தனர். இம்முறை யாருக்கும் துணை முதல்வர் பதவி கிடையாது என, கட்சி மேலிடம் திட்ட வட்டமாக சொல்லிவிட்டது. எனினும், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில பா.ஜ., துணை தலைவரும், எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திராவுக்கு, அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என சொல்லப்பட்டது. எனினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X