விக்கிரவாண்டி,-விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த வேம்பி ஆதி திராவிட காலனி பகுதி மக்கள், தங்களுக்கு புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டி, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு அளித்தனர். மனுவை அமைச்சர் பொன்முடி, முதல்வருக்கு பரிந்துரை செய்ததன் பேரில் குடிநீர் தொட்டி கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று, அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பி.டி.ஓ., முபாரக் அலி பேக், மண்டல துணை பி.டி.ஓ., சுமதி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி, முன்னாள் துணை சேர்மன் அருணாசலம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி, எத்திராசன், சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வேல்முருகன், வெற்றிவேல், மாநில தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் முகிலன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE