ரூபாய் நோட்டு மாற்றம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூபாய் நோட்டு மாற்றம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Added : ஆக 04, 2021
Share
மும்பை:'கமிஷன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்கள், காயின்களை வாங்குவது, விற்பனை செய்வது தொடர்பான போலி அறிவிப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் முத்திரையை போலியாக பயன்படுத்தி, பழைய ரூபாய் நோட்டுக்கள், காயின்களை கமிஷன்

மும்பை:'கமிஷன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்கள், காயின்களை வாங்குவது, விற்பனை செய்வது தொடர்பான போலி அறிவிப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் முத்திரையை போலியாக பயன்படுத்தி, பழைய ரூபாய் நோட்டுக்கள், காயின்களை கமிஷன் அடிப்படையில், 'ஆன்லைன்' வாயிலாகவும், நேரிலும் வாங்க, விற்பனை செய்ய சிலர் அறிவிப்புகளை வெளியிட்டு வருவது எங்கள் கவனத்துக்கு வந்தது.

இதுபோன்ற பணிகளில் ரிசர்வ் வங்கி ஈடுபடவில்லை. அதற்கு கமிஷன், கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள, நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரம் அளிக்கவில்லை. எனவே, போலியான அறிவிப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X