விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம்

Added : ஆக 04, 2021
Share
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் நடந்தது. வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கி பேசுகையில், 'பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் நடந்தது. வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கி பேசுகையில், 'பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பாண்டிற்கு 4950 எக்டேரில் இத்திட்டம் செயல்படுத்த 23.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின் நிலுவையை சேர்த்து மொத்தம் 11.750 எக்டேரில் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டு 69.616 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைந்து அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.தொடர்ந்து, கம்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ஊக்க தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பயிற்சி சப் கலெக்டர் ரூபினா, வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், நேர்முக உதவியாளர் பெரியசாமி, தாசில்தார் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குனர் டாக்டர் மாதவன், மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி மற்றும் அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X