பொது செய்தி

தமிழ்நாடு

சீருடைப் பணியாளர் உடல் திறன் தேர்வில் 439 பேர் தேர்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் நடந்த சீருடைப் பணியாளர் பணிக்கான உடல் திறன் தேர்வில் 439 பேர் தேர்வு பெற்றனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு சார்பில் 2ம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 2,956 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு

விழுப்புரம்-விழுப்புரத்தில் நடந்த சீருடைப் பணியாளர் பணிக்கான உடல் திறன் தேர்வில் 439 பேர் தேர்வு பெற்றனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு சார்பில் 2ம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 2,956 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில், 1,593 ஆண்களும், 417 பெண்களும் தகுதி பெற்றனர்.இவர்களில், ஆண்களுக்கான உடல் திறன் தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 496 பேர் பங்கேற்றனர். இதில், கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 439 பேர் தேர்வு பெற்றனர். டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டனர். இன்று 5ம் தேதி 500 பேருக்கு உடல் திறன் தேர்வு நடக்கிறது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X