பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் தீர்த்தகுளம் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திண்டிவனம்-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனம் தீர்த்தகுளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டிவனம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள தீர்த்தகுளம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு சுகாதார சீர்கேடாய் உள்ளது என நேற்றைய 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி

திண்டிவனம்-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனம் தீர்த்தகுளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டிவனம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள தீர்த்தகுளம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு சுகாதார சீர்கேடாய் உள்ளது என நேற்றைய 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதுகுறித்து, திண்டிவனம் நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் கவனத்திற்குச் சென்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 9:30 மணியளவில், கமிஷனர் மற்றும் பொறியாளர் பவுல்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று தீர்த்தக்குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, குளத்தில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுத்து, நோட்டீஸ் வழங்க வேண்டும். குளத்திற்குள் கழிவு நீர் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, குளத்தை துாய்மைபடுத்தும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் கமிஷனர் வலியுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2:00 மணியளவில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் அமலியின் தலைமையில் தீர்த்தகுளத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று வீட்டின் உரிமையாளர் யார், நகராட்சிக்கு வரி செலுத்துபவர்களா, மின் இணைப்பு குறித்த விபரம் உள்ளிட்டவைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதன் அடிப்படையில் யார், யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என கண்டறிந்து, முறைப்படி ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X