கிரைம் செய்திகள்...

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மது குடித்தவரைதாக்கியவர் மீது வழக்குசின்னசேலம்: புக்கிரவாரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 32; இவர், நேற்று முன்தினம் வரதப்பனுாரில் உள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்கி அங்குள்ள நிலப்பகுதியில் அமர்ந்து குடித்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராமதுரை, 31; ராஜாவை திட்டி, மது பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.ராஜா கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம்

மது குடித்தவரைதாக்கியவர் மீது வழக்குசின்னசேலம்: புக்கிரவாரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 32; இவர், நேற்று முன்தினம் வரதப்பனுாரில் உள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்கி அங்குள்ள நிலப்பகுதியில் அமர்ந்து குடித்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராமதுரை, 31; ராஜாவை திட்டி, மது பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.ராஜா கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தங்கை மாயம்அண்ணன் புகார்விழுப்புரம்: விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் காசிநாதன் மகள் பிரியதர்ஷினி, 33; இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் சாரதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மது விற்ற இருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: டி.குமாரமங்கலம், சேமங்கலம் கிராமங்களில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டி.குமாரமங்கலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த வைரம், 62; சேமங்கலம் கிராமத்தில் ராஜேந்திரன், 64; ஆகிய இருவரையும் கைது செய்து, 43 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.தம்பி மாயம்அண்ணன் புகார்விழுப்புரம்: வளவனுார் அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி மகன் அருள்பாண்டியன், 27; மதகடிப்பட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை, கடந்த மாதம் 26ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது அண்ணன் செல்வமணி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.பைக் மோதி ஒருவர் பலிதிண்டிவனம்: ஒலக்கூர் அடுத்த சேந்தமங்கலம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் வேணு, 51; இவர், கடந்த 1ம் தேதி மாலை ஆவணிப்பூரில் இருந்து சேந்தமங்கலம் கிராமத்திற்கு நடந்து சென்றார். சேந்தமங்கலம் ஏரிக்கரை மதகு அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த பைக், வேணு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வேணு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மினி வேன் மோதிசிறுமி பலிஉளுந்துார்பேட்டை: பாதுார் காந்தி நகரைச் சேர்ந்தவர் கபிலன். இவரது மகள் ஹாசனி, 8; அதே பகுதியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் அஜித், 22; ஓட்டி வந்த மினி வேன் மோதி, ஹாசனி சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.கூரை வீடு எரிந்து சேதம்திண்டிவனம்: திண்டிவனம் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.பெலாக்குப்பம், பனந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சீட்டை, 70; இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்தது. திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையில் நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின. ரோஷணை போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X