பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளியில் பூச்சி தாக்குதல் காப்பது குறித்து ஆலோசனை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை,-பூச்சி தாக்குதல்களிலிருந்து மரவள்ளி பயிரை காப்பது குறித்து உளுந்துார்பேட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் நேரில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார், ஆசனுார், பாலி, ஏ.சாத்தனுார், திருப்பெயர், எறையூர் உள்ளிட்ட கிராமங்களில் 150 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளியில் செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி

உளுந்துார்பேட்டை,-பூச்சி தாக்குதல்களிலிருந்து மரவள்ளி பயிரை காப்பது குறித்து உளுந்துார்பேட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் நேரில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார், ஆசனுார், பாலி, ஏ.சாத்தனுார், திருப்பெயர், எறையூர் உள்ளிட்ட கிராமங்களில் 150 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளியில் செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.ஏ.சாத்தனுாரில் பயிர்களை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் முருகன் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட நுனி குருத்துகளை அகற்ற வேண்டும். மாவுப்பூச்சிகளால் பாதிக்கப்பட்ட காய்ந்த செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மரவள்ளி பயிரினை அழிவிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X