இந்திய அணி அபார பந்துவீச்சு; நான்கு விக்கெட் சாய்த்தார் பும்ரா

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021
Share
Advertisement
நாட்டிங்காம்: டெஸ்ட் தொடரை இந்தியா அமர்க்களமாக துவக்கியது. பும்ரா வேகத்தில் சிதறிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு சுருண்டது.இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரராக

நாட்டிங்காம்: டெஸ்ட் தொடரை இந்தியா அமர்க்களமாக துவக்கியது. பும்ரா வேகத்தில் சிதறிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு சுருண்டது.



latest tamil news



இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் என நான்கு வேகங்கள் சேர்க்கப்பட்டனர். சுழலில் ஜடேஜா மட்டும் இடம் பெற்றார். இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ், தனது 75 வது டெஸ்டில் களமிறங்கினார்.


பும்ரா நம்பிக்கை



இங்கிலாந்து அணிக்கு சிப்லே, பர்ன்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை பும்ரா வீசினார். இதன் ஐந்தாவது பந்தில் பர்ன்ஸ் 'டக்' அவுட்டானார். கிராலே, சிப்லே இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆடுகளம் 'வேகத்துக்கு' கைகொடுக்க, முதல் ஒரு மணி நேரத்தில் இங்கிலாந்து அணி 29/1 ரன் மட்டும் எடுத்தது.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிராலே (27), சிராஜ் பந்தில் ரிஷாப்பிடம் 'கேட்ச்' கொடுத்தார். அம்பயர் அவுட் தர மறுக்க, 'டி.ஆர்.எஸ்.,' முறையில் அப்பீல் செய்யுமாறு கோஹ்லியிடம் வற்புறுத்தினார் ரிஷாப். முடிவில் கோஹ்லி தயக்கத்துடன் அப்பீல் செய்ய, கடைசியில் அவுட் உறுதியானது.


ஜோ ரூட் அரைசதம்



அடுத்து வந்த ஜோ ரூட், சிராஜ் ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். மறுபக்கம் முகமது ஷமி பந்தில் சிப்லே (18) அவுட்டானார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், அரைசதம் எட்டினார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த பேர்ஸ்டோவ், 29 ரன்னில் ஷமி பந்தில் 'பெவிலியன்' திரும்பினார்.


latest tamil news


மீண்டும் மிரட்டிய ஷமி, லாரன்சை வந்த வேகத்தில் 'டக்' அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். பட்லரை (0), பும்ரா வெளியேற்றினார். ஜோ ரூட்டை (64), ஷர்துல் தாகூர் அவுட்டாக்கினார். ராபின்சன் (0), பிராட் (4), ஆண்டர்சன் (1) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு சுருண்டது. சாம் கர்ரான் (27) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய சார்பில் பும்ரா 4, ஷமி 3, ஷர்துல் தாகூர் 2, சிராஜ் 1 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து, 162 ரன் பின்தங்கி இருந்தது. ரோகித் (9), ராகுல் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X