தமிழ்நாடு

நீர் பங்கிட்டு வழங்குவதில் தீர்வு காணப்படாததால் விவசாயிகள் வேதனை 

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : வைகை பூர்வீக பாசனப்பகுதிகளுக்கு நீர் பங்கிட்டு வழங்குவதில் தீர்வு காணப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசின் கொள்கை முடிவு என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம்வைகை பாசனப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்குஅதன் ஒவ்வொரு பாசனப்பருவத்திற்கும் நிரந்தர அரசாணை பிறப்பித்து தொடர்ச்சியாக தண்ணீர்

சிவகங்கை : வைகை பூர்வீக பாசனப்பகுதிகளுக்கு நீர் பங்கிட்டு வழங்குவதில் தீர்வு காணப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசின் கொள்கை முடிவு என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம்வைகை பாசனப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்குஅதன் ஒவ்வொரு பாசனப்பருவத்திற்கும் நிரந்தர அரசாணை பிறப்பித்து தொடர்ச்சியாக தண்ணீர் திறக்க வேண்டும், என மனு கொடுத்துள்ளார். இந்த மனுவிற்கு சருகனியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார்.

அதில் வைகை பூர்வீக பாசனப்பகுதியில் 374 கண்மாய்கள் மூலம்ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. வைகை அணையின்கீழ் வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையினால் ஆற்றில் ஓடும் நீர் மற்றும் அந்தந்த நீர்பிடிப்பு கண்மாய்களின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன.வைகை அணைப்பகுதியில் பெய்யும் மழை நீர் வைகை பாசனப்பகுதிக்கும், பெரியாற்றில் இருந்து கிடைக்கும் நீர் பெரியாறு பாசனப்பகுதிக்கும் பங்கிட்டு வழங்கப்படுகிறது.

வைகை பூர்வீக பாசன அமைப்பு, பெரியாறு பாசன அமைப்பு என்பது வெவ்வேறான அமைப்புகளாகும். இரு அமைப்புகளையும் ஒன்றாக இணைத்து பாசன நீரை பங்கிட்டு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும், என தெரிவித்துள்ளார்.வைகை பூர்வீக பாசனப்பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் குறித்து முறையான அரசாணை இன்று வரை பொதுப்பணித்துறையினரால் வழங்கப்படவில்லை.

வைகை பாசனப்பகுதிவிவசாயிகள் எதிர்பார்ப்பது வைகை அணையில் போதுமான நீர் இருக்கும் பட்சத்தில்பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு வைகை பூர்வீக பாசனப்பகுதிகளுக்கு நீர் திறப்பது குறித்து நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்பதாகும். இதனை பற்றி அரசு தீர்வு காணாமல் அரசின் கொள்கை முடிவுஎன விளக்கமளித்திருப்பது வைகை பூர்வீக பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம் தெரிவித்திருப்பதாவது: முதல்வரின் விடியல் தரப்போராரு என்ற திட்டத்தில் மனு கொடுத்திருந்தோம். சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து பேசாமல் பிரச்னைகளைகூட அறிந்து கொள்ளாமல் பொதுவாக அரசின் கொள்கை முடிவு என தெரிவித்திருப்பது பிரச்னைக்கு தீர்வு காணாமல் நழுவும் செயலாக உள்ளது, என்றார்.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X