பெருநாழிக்கு பஸ் வசதியில்லாததால் கிராம மக்கள் அவதி| Dinamalar

தமிழ்நாடு

பெருநாழிக்கு பஸ் வசதியில்லாததால் கிராம மக்கள் அவதி

Added : ஆக 04, 2021
Share
கமுதி : கமுதியில் இருந்து புதுக்கோட்டை வழியாக பெருநாழிக்குபஸ் வசதியில்லாததால் கிராமமக்கள் கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவிலும், விதிமுறைகளை மீறி சரக்கு வாகனத்திலும்செல்லும் நிலை இருப்பதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.கமுதி அருகே புதுக்கோட்டை, குண்டுகுளம், வண்ணாங்குளம், பம்மனேந்தல், தெற்கு மாவிலங்கை, வீரமச்சான்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500க்கும்

கமுதி : கமுதியில் இருந்து புதுக்கோட்டை வழியாக பெருநாழிக்குபஸ் வசதியில்லாததால் கிராமமக்கள் கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவிலும், விதிமுறைகளை மீறி சரக்கு வாகனத்திலும்செல்லும் நிலை இருப்பதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.

கமுதி அருகே புதுக்கோட்டை, குண்டுகுளம், வண்ணாங்குளம், பம்மனேந்தல், தெற்கு மாவிலங்கை, வீரமச்சான்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கமுதியில் இருந்து புதுக்கோட்டை, குண்டுகுளம் வழியாக பெருநாழிக்கு பஸ் வசதியில்லாததால் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர்.

கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் செல்லும் நிலை உள்ளது. தற்போது கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இருந்தும் பஸ் இயக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி கூறியதாவது:கிராமத்திற்கு பஸ் வசதியில்லாததால் அத்தியாவசிய வேலைக்கு செல்வதற்கு கூட சிரமப்படுகின்றோம்.

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி, முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட 30 கி.மீ துாரம் சுற்றி பெருநாழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்கின்றோம். கமுதியில் இருந்து இரவுநேரத்தில் வரும்போது ஒருவித அச்சமாக உள்ளது.

எனவே கமுதியில் இருந்து புதுக்கோட்டை, குண்டுகுளம் வழியாக பெருநாழிக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வழியே பஸ் இயக்கப்பட்டால் 20 கிராமமக்கள்பயன் பெறுவார்கள், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X