பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.15 ல் கிராம சபைக்கூட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆக., 15ல் கிராமசபை கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும், என கோரி மனு கொடுத்துள்ளனர்.ஏழுநாட்களுக்கு முன்பாக கிராம சபை கூட்டத்திற்கு அழைப்பு தர வேண்டும். கிராமசபையில் மக்கள் முன்னிலையில் ஊராட்சியின் வரவு-செலவு கணக்கு தணிக்கை அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.மக்கள் முன் வைக்கும்

சிவகங்கை : மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆக., 15ல் கிராமசபை கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும், என கோரி மனு கொடுத்துள்ளனர்.

ஏழுநாட்களுக்கு முன்பாக கிராம சபை கூட்டத்திற்கு அழைப்பு தர வேண்டும். கிராமசபையில் மக்கள் முன்னிலையில் ஊராட்சியின் வரவு-செலவு கணக்கு தணிக்கை அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை தீர்மானமாக பதிவு செய்யப்பட வேண்டும். கிராமசபை முடிந்த பின்பு கூட்ட தீர்மான நகல் கேட்கும் நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தீர்மானங்கள் நிறைவேற்ற கோரம் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிராம சபை கூட்டங்களை வீடியோ, போட்டோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கிராமசபை கூட்டங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து குக் கிராமங்களில் நடத்திட சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கமல்ராஜா, நகர செயலாளர் சரவணன், இளைஞரணி பிரேம்நாத் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர் வர்த்தகப்பிரிவு கர்ணன், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயலர் செல்வி உட்பட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X