தமிழ்நாடு

கொரோனாவால் நாடு திரும்பிய தொழிலாளர்கள்; மலேசியா, சிங்கப்பூரிலும் பாதிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : தமிழகம் திரும்பிய தொழிலாளர்களால் மலேசியா,சிங்கப்பூர் நாடுகளில் முடி அலங்காரம் மற்றும் உணவகத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.உலகையே புரட்டி எடுத்துள்ள கொரோனாவால் பலரும் பாதித்துள்ளனர். பல தொழிலாளர்கள் புலம் பெயர்ந்துள்ளதால் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்றால் பல கம்பெனிகளில் பணியிடங்களை குறைத்து விட்டனர். பலரும் பணியிழந்து நாடு

திருப்புத்துார் : தமிழகம் திரும்பிய தொழிலாளர்களால் மலேசியா,சிங்கப்பூர் நாடுகளில் முடி அலங்காரம் மற்றும் உணவகத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.உலகையே புரட்டி எடுத்துள்ள கொரோனாவால் பலரும் பாதித்துள்ளனர். பல தொழிலாளர்கள் புலம் பெயர்ந்துள்ளதால் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பல கம்பெனிகளில் பணியிடங்களை குறைத்து விட்டனர். பலரும் பணியிழந்து நாடு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சத்தால் தாமாகவே நாடு திரும்பியவர்களும் பலர்.குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் முடி அலங்காரம் மற்றும் பரோட்டா மாஸ்டர் உள்ளிட்ட செட்டிநாடு,தென்னிந்திய சமையல் கலைஞர்கள் பலரும் கொரோனாவால் நாடு திரும்பினர். 30 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளுக்கு பணிக்கு திரும்ப முடியாமல் உள்ளூரிலேயே முடங்கியுள்ளனர். சிலர் விவசாயப் பணிகளில் இறங்கினர். வேறு சிலர் உள்ளூரில் உணவகங்களைத் துவக்கியும் சமாளிக்கப் பார்க்கின்றனர்.இவர்கள் பணி புரிந்த மலேசியா,சிங்கப்பூரிலும் இவர்கள் இல்லாத பாதிப்பு எதிரொலிக்கிறது. அங்கும் திறமையான உணவக,முடிதிருத்த தொழிலாளர்கள் இல்லாமல் இத்தொழில்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X