பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளை நோகடிக்கும் அரசு பஸ் கண்டக்டர்கள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளிடம் ஐ.டி., கார்டு நகல் கேட்டு கண்டக்டர்கள் நோகடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்ட நிலையில், தங்களுக்கும் இலவச பயணச்சலுகை அளிக்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து 40 சதவீதத்துக்கும் அதிகமான

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளிடம் ஐ.டி., கார்டு நகல் கேட்டு கண்டக்டர்கள் நோகடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்ட நிலையில், தங்களுக்கும் இலவச பயணச்சலுகை அளிக்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்டவர்கள் உதவியாளருடன் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், இதற்காக தேசிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காட்டினால் போதும் அவர்களுக்கு இலவச பயண டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில் திருப்புத்துார் பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் அடையாள அட்டை நகல் கொடுத்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.மாற்றுத்திறனாளி ஒருவர் தெரிவித்ததாவது:

திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரிக்கு பயணிக்கும் போது அடையாள அட்டையை காட்டினேன். நகல் கொடுத்தால் தான் பயணிக்க முடியும் இல்லையென்றால் கீழே இறங்கு என்று கண்டக்டர் ஒருமையில் திட்டினார். அரசின் உத்தரவை மதிக்காமல் சிலர் இப்படி செய்கிறார்கள்.3 பக்க அட்டையை நகல் எடுக்க ரூ. 6 வரை செலவாகிறது. இதனால் இலவசப் பயணச் சலுகையின் நோக்கமே கெடுகிறது.

அடையாள அட்டை நகலை கட்டாயம் பெற டிப்போ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர், என்றார்.திருப்புத்துார் டிப்போ கிளை மேலாளர் இளங்கோ கூறுகையில், இலவச பயணத்திற்கு அடையாள அட்டையை காட்டினால் போதுமானது நகல் ஏதும் கொடுக்க தேவையில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X