31 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறுவை அறுவடைக்காக கலெக்டர் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

31 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறுவை அறுவடைக்காக கலெக்டர் நடவடிக்கை

Added : ஆக 04, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடலுார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் 87 ஆயிரத்து 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், டெல்டா பகுதிகளில் 40 ஆயிரத்து 625 ஏக்கரிலும், பிற பகுதிகளில் 46 ஆயிரத்து 875 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது அறுவடைப் பணி துவங்கி

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடலுார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் 87 ஆயிரத்து 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், டெல்டா பகுதிகளில் 40 ஆயிரத்து 625 ஏக்கரிலும், பிற பகுதிகளில் 46 ஆயிரத்து 875 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது அறுவடைப் பணி துவங்கி உள்ளது. வெளி மார்க்கெட்டில் நெல் கொள்முதல் செய்வது மந்தகதியில் உள்ளது. எனவே குறுவை நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், 2021--22 ஆண்டில் நெல் கொள்முதல் பருவத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாவட்டத்தில் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் பாலசுப்ரமணியம் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடலுார் வட்டத்தில் நடுவீரப்பட்டு, பட்டீஸ்வரம், சி.என்.பாளையம் கிராமங்கள், புவனகிரி வட்டத்தில் பூவாலை, கொளக்குடி கிராமங்கள், விருத்தாசலம் வட்டத்தில் வயலுார், சத்தியவாடி, ராஜேந்திரப்பட்டினம், கொடுமனுார், இருப்புக்குறிச்சி, கம்மாபுரம், தொரவளூர், கோ.மங்கலம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் வெங்கிருசமுத்திரம், எசனுார், கள்ளிப்பாடி, மேலப்பாளையூர், கார்மாங்குடி, சி.கீரனூர், காவனுார், தொழூர், நெடுஞ்சேரி, குணமங்கலம், ஸ்ரீமுஷ்ணம், அம்புஜவள்ளிபேட்டை, கானுார், எம்.பி.அக்ரம், பேரூயர் ஆகிய 15 கிராமங்கள், வேப்பூர் வட்டத்தில் 3 கிராமங்கள், சேதுவராயன்குப்பம், சிறுவரப்பூர், பனையாந்துார் என, 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்ன ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு 1,888 ரூபாயுடன் தமிழக அரசு போனஸ் தொகையாக 70 ரூபாயும் சேர்த்து 1,958 ரூபாயாக வழங்கப்படும்.மத்திய அரசு சாதாரண ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு 1,868 ரூபாயுடன் தமிழக அரசு போனஸ் தொகை 50 ரூபாய் சேர்த்து 1,918 ரூபாய் வழங்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X