கால்நடைகளுக்கு வாய், கால் நோய்கள்!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு வாய், கால் நோய்கள்!

Added : ஆக 04, 2021
Share
பொள்ளாச்சி : மழை காலங்களில் கால்நடைகளை கால் மற்றும் வாய் நோய்கள் அதிகம் தாக்கும் என்பதால், சிறப்பு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும், என, கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமுள்ளதாலும், கால்நடைகள் மழையில் நனைந்து ஈரம் ஆவதாலும், மழை பருவத்துக்கே உரிய கிருமிகளால், கால் மற்றும் வாய் நோய்கள் மாடு, எருமை, ஆடுகளை தாக்குகின்றன. இது குறித்து

பொள்ளாச்சி : மழை காலங்களில் கால்நடைகளை கால் மற்றும் வாய் நோய்கள் அதிகம் தாக்கும் என்பதால், சிறப்பு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும், என, கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமுள்ளதாலும், கால்நடைகள் மழையில் நனைந்து ஈரம் ஆவதாலும், மழை பருவத்துக்கே உரிய கிருமிகளால், கால் மற்றும் வாய் நோய்கள் மாடு, எருமை, ஆடுகளை தாக்குகின்றன.

இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:மழை காலங்களில் கால்நடைகளின் நாக்கு, மூக்கு, உதடுகள் மற்றும் பற்களிலும், கால்விரல்களுக்கு இடையிலும் கொப்புளம் போன்ற புண்கள் ஏற்படுகின்றன. இதனால் அவை பாதிக்கப்படுகின்றன. கொப்புளங்கள் வாயிலிருந்து நுரையுடன் கூடிய உமிழ் நீர்ஒழுகலை ஏற்படுத்துகிறது.கால்கள் பாதிக்கப்பட்ட கால்நடைகள், நிற்கவும், நடக்கவும் இயலாமல் வலியால் அவதிப்பட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவனம் எடுப்பதை நிறுத்துகிறது. பால் கறவையும் குறையும்.இந்நோய்கள், பருவநிலை மாற்றம் மற்றும் விலங்குகள் இடம் பெயரும் போது பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஒரு விலங்கிடம் இருந்து, ஆரோக்கியமான விலங்குகளுக்கு பரவுகிறது.இந்த நோயைத் தடுக்க, பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்த வேண்டும். புதிய கால்நடைகளை வாங்கும் போது, அவற்றை, 21 நாட்களுக்கு தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.நோய் பாதித்த கால்நடையின், வாய் மற்றும் கால் பாகங்களை, 1 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் கழுவ வேண்டும். போரிக் அமில கிளிசரின் பேஸ்ட் வாயில் தடவ வேண்டும்.இத்துடன், கால்நடை மருத்துவர்களை கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு, 6 மாத இடைவெளியில் எப்.எம்.டி., தடுப்பூசி செலுத்த வேண்டும்.இவ்வாறு, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X