கடலுாரில் கொரோனா விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

Added : ஆக 04, 2021
Share
கடலுார்-கடலுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.கொரோனா வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி கலெக்டர் பாலசுப்ரமணியம்தலைமையில் ஏற்கப்பட்டது. அரசினர் தொழிற்பயிற்சி

கடலுார்-கடலுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.கொரோனா வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி கலெக்டர் பாலசுப்ரமணியம்தலைமையில் ஏற்கப்பட்டது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்ற கொரோனா குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின், அவர் கூறியதாவது;அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை அனைவரும் பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்தும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சிங், பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X