கல்லுாரி சேர்க்கை: மாணவர்கள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி சேர்க்கை: மாணவர்கள் ஆர்வம்

Added : ஆக 04, 2021
Share
உடுமலை : உயர்கல்வியில் சேரும் பிளஸ் 2 மாணவர்கள், ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து, பள்ளித்தலைமையாசிரியர்களின் கையொப்பம் பெற முனைப்பு காட்டுகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்

உடுமலை : உயர்கல்வியில் சேரும் பிளஸ் 2 மாணவர்கள், ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து, பள்ளித்தலைமையாசிரியர்களின் கையொப்பம் பெற முனைப்பு காட்டுகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பட்டியல் வழங்கப்பட்டது.மதிப்பெண்கள் வெளியிடுவதற்கு முன்னரே, ஒரு சில தனியார், அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், மதிப்பெண் தவிர பிற விவரங்களை மட்டும் பதிவு செய்திருந்தனர்.தற்போது, மதிப்பெண்ணை குறிப்பிட்டு மீண்டும் விண்ணப்பிக்க, சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

உடுமலை கல்வி மாவட்டத்தில், ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கும் மாணவர்கள், தலைமையாசிரியர்களின் கையொப்பம் பெற முனைப்பு காட்டுகின்றனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் பட்டியல் இன்னும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நாளில் இருந்தே கல்லுாரியில் சேர மணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது, பெரும்பாலான கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டும் வருகிறது. மதிப்பெண் கோரும் கல்லுாரியில், அசல் மதிப்பெண் அளிக்க முடியாத காரணத்தால், தலைமையாசிரியர் கையொப்பம் இட்ட மதிப்பெண் பட்டியல் பெற மாணவர்கள், பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 என, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் பெற முற்படுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X