பொது செய்தி

தமிழ்நாடு

ஊஞ்சல் உற்சவம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பண்ருட்டி-திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு புண்யாவாசனம், நித்ய ேஹாமம், 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

பண்ருட்டி-திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு புண்யாவாசனம், நித்ய ேஹாமம், 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12 மணிக்கு வேதபிரபந்த சாற்றுமறை, மாலை 5.30 மணிக்கு உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருட ன்சுவாமி உள்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 7 மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனை, நித்ய ேஹாமம், 9 மணிக்கு அஷ்டோத்தர சத 108 கலச திருமஞ்சனம், காலை 11:30 மணிக்கு கடம்புறப்பாடாகி வேதபிரபந்த சாற்றுமறை, மாலை 6:30 மணிக்கு உற்சவர் பெருமாள், உபயநாச்சியாருடன் உள்புறப்பாடு நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X