பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் சாம்பல் நிற இருவாச்சி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுாரில், உணவுக்காக குடியிருப்புகளில் முகாமிடும் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள், மக்களை கவர்ந்துள்ளன.கூடலுார் வனப்பகுதி, சாம்பல் நிற இருவாச்சி பறவைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. வனங்களில் கிடைக்கும் பழங்கள், பூச்சி புழுக்கள் இவைகளின் முக்கிய உணவாகும். இவைகள் வனம் மற்றும் வனத்தை ஒட்டிய எஸ்டேட் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.தற்போது, கூடலுாரில்

கூடலுார் : கூடலுாரில், உணவுக்காக குடியிருப்புகளில் முகாமிடும் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள், மக்களை கவர்ந்துள்ளன.கூடலுார் வனப்பகுதி, சாம்பல் நிற இருவாச்சி பறவைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.

வனங்களில் கிடைக்கும் பழங்கள், பூச்சி புழுக்கள் இவைகளின் முக்கிய உணவாகும். இவைகள் வனம் மற்றும் வனத்தை ஒட்டிய எஸ்டேட் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.தற்போது, கூடலுாரில் பருவமழை பெய்து வரும் நிலையில், இப்பறவைகள் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு பழங்கள், பூச்சிகளை உணவாக உண்டும், தன் குஞ்சுகளுக்காக எடுத்தும் செல்கின்றன.நீண்ட அழகுடன் சாம்பல் நிறத்தில், குடியிருப்புக்கு வரும் பறவைகளை, சிறுவர்கள் முதல் பறவை ஆர்வலர்கள் வரை, 'போட்டோ' எடுத்து வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில்,'மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நான்கு வகையான இருவாச்சி பறவைகள் உள்ளன. அதில், கூடலுார் பகுதியில், சாம்பல் நிற இருவாச்சி, மலபார் இருவாச்சி பறவைகளை அதிக அளவில் காணமுடிகிறது. மழை பெய்து வரும் நிலையில், அவைகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவில் வந்து செல்கின்றன. மக்கள் இப்பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X