பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் சூரிய ஆராய்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை : சூரிய ஆராய்ச்சி குறித்த 'ஆன்லைன்' நிகழ்ச்சியில் பங்கேற்க, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், டி.ஒய்.ஏ.யு., தன்னார்வ நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஆன்லைன் கருத்தரங்கு, ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிடும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, கொடைக்கானல்

உடுமலை : சூரிய ஆராய்ச்சி குறித்த 'ஆன்லைன்' நிகழ்ச்சியில் பங்கேற்க, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், டி.ஒய்.ஏ.யு., தன்னார்வ நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஆன்லைன் கருத்தரங்கு, ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிடும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி எட்வின், வரும், 8ல், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை, சூரிய ஆராய்ச்சிகள் குறித்து விளக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க உள்ளார்.

மேலும், சூரிய ஆராய்ச்சிக் கூடத்தின் பல்வேறு தொலைநோக்கிகளை, ஆன்லைனில் அவரவர் வீடுகளில் இருந்தே காணலாம்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு,https://forms.gle/Qs75hQGVP3riznZS6என்ற இணையதளம் வாயிலாக, வரும் 7ம் தேதி மாலைக்குள் பதிவு செய்தல் வேண்டும். தகவல் அறிய, 87782 01926 என்ற மொபைல் எண், galilioscienceclub@gmail.com என்ற இமெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X