வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி | Dinamalar

வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி

Added : ஆக 04, 2021
Share
பாகூர்,-புதுச்சேரியில் வாடகைக்கு எடுத்துச் சென்ற கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். ரூ. 45 லட்சம் மதிப்பிலான ஆறு கார்கள் மீட்கப்பட்டன.புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் காமராஜ் தெருவைச்சேர்ந்தவர் தினேஷ், 36; அவரது நண்பர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ரமேஷ், 35.இருவரும் தனி நபர்களிடம் கார்களை, மாத வாடகைக்கு எடுத்து, அதனை தமிழக

பாகூர்,-புதுச்சேரியில் வாடகைக்கு எடுத்துச் சென்ற கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். ரூ. 45 லட்சம் மதிப்பிலான ஆறு கார்கள் மீட்கப்பட்டன.புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் காமராஜ் தெருவைச்சேர்ந்தவர் தினேஷ், 36; அவரது நண்பர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ரமேஷ், 35.இருவரும் தனி நபர்களிடம் கார்களை, மாத வாடகைக்கு எடுத்து, அதனை தமிழக பகுதியில் அடமானம் வைத்து மோசடி செய்து, தலைமறைவாகினர்.இது குறித்து கிருமாம்பாக்கம், அரியாங்குப்பம், கோரிமேடு ஆகிய போலீஸ் நிலையங்களில், கார் உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.தினேஷ், ரமேஷ் மீது, மோசடி வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கினர்.விசாரணையில், ரமேஷ், அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிகிறார். இவரது அடையாள அட்டையை கார் உரிமையாளர்களிடம் காண்பித்து, கொரோனா பணிக்கு என கூறி, 16 கார்களை வாடகைக்கு எடுத்தனர். பின்னர், கார்களை அடமானம் வைத்து, தலைமறைவாகியது தெரிய வந்தது.தெற்கு எஸ்.பி., லோகேஷ்வரன், மோசடி நபர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மேற்பார்வையில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தனிப்படை அமைத்து, தினேஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.கடலுாரில் பதுங்கி இருந்த தினேஷை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடமானம் வைத்திருந்த 6 கார்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு 45 லட்சம் ரூபாய்.நேற்று தினேஷை கோர்ட்டில் அஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.கார் மோசடி வழக்கில், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, கார்களை பறிமுதல் செய்த போலீசாரை, தெற்கு எஸ்.பி., லோகேஷ்வரன் பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X