புதுச்சேரியில் 1,354 பேரிடம் ரூ. 3.50 கோடி மோசடி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் 1,354 பேரிடம் 3.50 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.டில்லியை தலைமையிடமாக கொண்ட கே.எம்.ஜி., லேண்ட் டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவன கிளை, முதலியார்பேட்டை ஜான்சி நகரில், 2012ம் ஆண்டு முதல் இயங்கியது.இந்நிறுவனத்தில், மாதந்தோறும் முதலீடு செய்தால் அதிக லாபம்

புதுச்சேரி-புதுச்சேரியில் 1,354 பேரிடம் 3.50 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.டில்லியை தலைமையிடமாக கொண்ட கே.எம்.ஜி., லேண்ட் டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவன கிளை, முதலியார்பேட்டை ஜான்சி நகரில், 2012ம் ஆண்டு முதல் இயங்கியது.இந்நிறுவனத்தில், மாதந்தோறும் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். திட்ட கால முடிவில் முதிர்வு தொகை அல்லது அதற்கு இணையான தொகைக்காக நிலம் வாங்கிக் கொள்ளலாம் என கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 14வது குறுக்குத் தெரு பழனி,50, என்பவர், ரூ. 4 லட்சத்து 17 ஆயிரம் செலுத்தினார்.கடந்த 2017ம் ஆண்டில் நிறுவனத்தை பூட்டிக்கொண்டு நிர்வாகிகள் தலைமறைவாகினர்.டில்லியில் உள்ள தலைமையகத்தை அவர் பலமுறை தொடர்பு கொண்டபோதும், எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் பழனி நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.அதன்பேரில், நிறுவனத்தை சேர்ந்த சந்தோஷிலால் ரத்தோர், 40, கஞ்சன் ராஜவாத் குஷ்வா,35, நிர்மலா ரத்தோர்,35, செய்யது ரஷீத் ஹாஸ்மி,40, உள்ளிட்டோர் மீது மோசடி உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.பழனி உள்பட 1,354 பேரிடம் 3.50 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கே.எம்.ஜி., லேண்ட் டெவலப்பர்ஸ் நிர்வாகி, அதிகாரிகளை கைது செய்யவும், நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X