சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்' கள்ளக்குறிச்சி போலீஸ் அதிரடி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, எலவனாசூர்கோட்டை பகுதியில், தொடர் திருட்டு; சிறுமி கடத்தல் வழக்கில் எஸ்.மலையனுார்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, எலவனாசூர்கோட்டை பகுதியில், தொடர் திருட்டு; சிறுமி கடத்தல் வழக்கில் எஸ்.மலையனுார் அய்யப்பன், 22, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அதேபோல், கஞ்சா பயிரிட்ட சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் அய்யாகண்ணு, 59; கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மணலுார்பேட்டை அடுத்த பள்ளச்சந்தல் பகுதியைச் சேர்ந்த அய்யர், 42; தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். திருநாவலுார் அடுத்த பெரியப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்,40; அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.இவர்கள், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி.,ஜியாவுல்ஹக் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஸ்ரீதர், நான்கு பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள நான்கு பேருக்கும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X