சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவாரணத்தில் முறைகேடு வி.ஏ.ஓ., 'சஸ்பென்ட்'

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வடலுார்-குறிஞ்சிப்பாடி அருகே வெள்ள நிவாரணத்தில் முறைகேடு செய்ததாக வி.ஏ.ஓ., வை பணியிடை நீக்கம் செய்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த வடகுத்து வி.ஏ.ஓ., சந்தானகிருஷணன். கடந்த 2015ல், கொத்தவாச்சேரி கிராமத்தை கூடுதல் பொறுப்பில் கவனித்து வந்தார். அப்போது, இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத நிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியதாக கடலுார்

வடலுார்-குறிஞ்சிப்பாடி அருகே வெள்ள நிவாரணத்தில் முறைகேடு செய்ததாக வி.ஏ.ஓ., வை பணியிடை நீக்கம் செய்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த வடகுத்து வி.ஏ.ஓ., சந்தானகிருஷணன். கடந்த 2015ல், கொத்தவாச்சேரி கிராமத்தை கூடுதல் பொறுப்பில் கவனித்து வந்தார். அப்போது, இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத நிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியதாக கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முறைகேடு செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரிந்தது.லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரையின்பேரில் கடலுார் ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, வி.ஏ.ஓ., சந்தான கிருஷ்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையத் அபுதாகீர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் வி.ஓ.ஏ., அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X