அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் 17 பேர் குழு அமைத்தது பா.ஜ.,

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை:உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, போட்டியிடும் இடங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள் அடங்கிய 17 பேர் குழுவை நியமித்து உள்ளார்.உற்சாகம்தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றது. இது,

சென்னை:உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, போட்டியிடும் இடங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள் அடங்கிய 17 பேர் குழுவை நியமித்து உள்ளார்.


உற்சாகம்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றது. இது, அக்கட்சி தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.அவர் தலைவராக பொறுப்பேற்றது முதல், மாவட்ட வாரியாக சென்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, கட்சியை பலப்படுத்தி வருகிறார்.

அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் அதிகளவில் திரள்கின்றனர்.விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலில் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு, வெற்றி பெற பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.


வெற்றி வியூகம்

உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள, முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா.மாநில பொது செயலர்கள் கே.டி.ராகவன், கோவை செல்வகுமார், ராம சீனிவாசன், கரு.நாகராஜன்; மாநில செயலர் கார்த்தியாயினி ஆகியோர் அடங்கிய குழுவை, அண்ணாமலை நியமித்து உள்ளார்.

மேலும் அக்குழுவில், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்; தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா. மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன்; சிறப்பு அழைப்பாளர்கள் கே.பி.ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு, கூட்டணி கட்சியான அ.தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு, போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட இடங்களை அடையாளம் காண்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X